நாளைய நாடாளுமன்றில் அம்பாறை குறித்து விவாதம் செய்யவுள்ள உறுப்பினர்
அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் கழியோடை பிரதான ஆறு (ஆத்தியடிக்கட்டு) புனரமைப்பு தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கேள்வியெழுப்பவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கேள்விளினை, நாளைய தினம்(20) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கேட்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலங்கள்
கழியோடை ஆற்றை அண்டியதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான தீகவாபி தொடக்கம் கழியோடை வரையிலான 4 கிலோமீட்டர் நீளமான பிரதான கால்வாய் அடிக்கடி உடைப்பெடுப்பதன் காரணமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆயிரக்கணக்கிலான ஏக்கர் வயல் நிலங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேற்குறித்த கால்வாயை புனரமைப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தால் செலவின மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பதையும், இதற்கான செலவின மதிப்பீடு எவ்வளவு என்பதையும், இப்புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பாகவும் கேள்வி எழுப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கேள்விகளை, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன, அமைச்சர் லால் காந்தவிடம் கேட்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |