400 மில்லியன் டொலர் செலவாகும்! அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்

Sri Lanka Railways Department of Railways Railways
By Fathima Dec 15, 2025 11:38 AM GMT
Fathima

Fathima

அனர்த்தங்களினால் சேதமடைந்த தொடருந்து பாதைகளை புனரமைக்க சுமார் 400 மில்லியன் டொலர் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

புனரமைப்பு பணி

இதேவேளை, அனைத்து தொடருந்து பாதைகளின் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு சிறிது காலம் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

400 மில்லியன் டொலர் செலவாகும்! அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல் | Reconstruction Of Railway Lines Cost 400 Million

அத்துடன், பதுளை - ஸ்பிரிங்வெலி மற்றும் கந்தேகெதர மருத்துவமனைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மஹியங்கனை மற்றும் சிலாபம் மருத்துவமனைகள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையாக சேதம்

எனினும், அனர்த்தங்கள் காரணமாக மருத்துவமனைகளில் உள்ள சி.டி ஸ்கேனர்கள் போன்ற பல உபகரணங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

400 மில்லியன் டொலர் செலவாகும்! அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல் | Reconstruction Of Railway Lines Cost 400 Million

இதேவேளை, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 236 சுகாதார நிறுவனங்களில் சுமார் 90 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.