அரச குடியிருப்புகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிப்பு

By Mayuri Sep 27, 2024 11:30 AM GMT

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து அரச குடியிருப்புகள் மற்றும் விடுதிகளை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்குக் கொழும்பில் உள்ள சுமார் 50 அரச விடுதிகள் வழங்கப்பட்டிருந்தன.

வழங்கப்பட்டுள்ள அனுமதி

இதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச குடியிருப்புகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிப்பு | Re Handover Of Government Residences

குறித்த குடியிருப்புக்களை பொதுத் தேர்தல் நடைபெறும் தினத்திலோ அல்லது அதற்கு மறுநாளோ ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முத்திரை கட்டணம் உள்ளிட்ட அனைத்து வகையான கொடுப்பனவுகளும், வசதிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW