யாழ்ப்பாணம்-கொழும்பு விமான சேவை! கட்டண விபரங்கள் வெளியானது

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jul 04, 2023 04:42 PM GMT
Fathima

Fathima

இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் இந்த உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் முகாமையாளர் லக்‌ஷ்மன் வன்சேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய விமானத்தினூடாக கொழும்பிலிருந்து 1 மணித்தியாலம் 10 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும்.

கட்டண விபரம்

யாழ்ப்பாணம்-கொழும்பு விமான சேவை! கட்டண விபரங்கள் வெளியானது | Ratmalana To Palaly Flight Ticket Price

குறித்த விமான சேவை செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் முன்னெடுக்கப்படுகிறது.

விமானத்தின் ஊடான பயணத்திற்கு பயணி ஒருவருக்கான ஒருவழி கட்டணமாக 22,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 41,500 ரூபாவும் அறிவிடப்படுகின்றது.

அத்துடன் பயணி ஒருவர் அதிகபட்சமாக 7 கிலோகிராம் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW