இரத்தினபுரி விபத்தில் இளம் தம்பதியினர் பலி

Ratnapura Sri Lanka Accident
By Fathima May 12, 2023 06:32 PM GMT
Fathima

Fathima

இரத்தினபுரி - கொழும்பு வீதியின் திருவனகெட்டிய பகுதியில் இன்று காலை ( 12.05.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனை

பேருந்து ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது சீரற்ற வானிலை காரணமாக மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த பாரவூர்தியுடன் மோதியமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now