வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Disease
By Laksi Dec 19, 2024 12:21 PM GMT
Laksi

Laksi

வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் (S. Vaseegaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) - திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்நோயானது லெப்றரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும்.இது பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பக்டீரியாக்கள் வாழும்.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

நோய்ப்பாதிப்பு

எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும் இப் பக்டீரியாவானது மழை காலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் கலந்து அயற்புறங்களுக்கு பரவும். மழை காலங்களில் குடிநீர்க்கிணறுகளில் கூட தொற்றுக்கிருமிகள் கலக்கக்கூடும்.

வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை | Rat Fever Spread In North Risk Animal Transmission

தொற்றடைந்த நீரை பருகுவதாலோ அன்றி காயமுற்ற தோல், கண், வாய் போன்ற பகுதிகளில் தொடுகை உறும் வேளைகளில் பக்டீரியா உடலுள் ஊடுருவிச் செல்லும் வாய்ப்புள்ளது. இதுவே எமது உடலில் எலிக்காய்ச்சல் பரவ பிரதான காரணமாக உள்ளது.

இதே பக்டீரியாக்கள் நாய், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு மிருகங்களில் கூட இந்நோயினை ஏற்படுத்திவிடவும் வாய்ப்புக்கள் உண்டு. இந்த விலங்குகளின் மலம், சிறுநீர் போன்ற கழிவுகளில் நோய்க்கிருமி வெளியேறி இவ்விலங்குகள் வாழும் சூழலில் நெருங்கி பழகும் மனிதனிலும் நோயக்கிருமி பரவி நோய்ப்பாதிப்பை ஏற்படுத்தலாம்.

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி:வெளியான அறிவிப்பு

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி:வெளியான அறிவிப்பு

ஆய்வுகூட பரிசோதனை

மனிதனின் குருதியில் நோய்கிருமிகள் உள்ளதை இரத்தப்பரிசோதனைகள் மேற்கொண்டு உறுதிப்படுத்துவதை போலவே வளர்ப்பு விலங்குகளின் குருதி, சிறுநீர் ஆகியவற்றை ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தி நோய்கிருமியின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த முடியும்.

வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை | Rat Fever Spread In North Risk Animal Transmission

இந்நோய் பரவாது தடுப்பதற்கு கொதிக்கவைத்த நீர் பருகுதல்,சுகாதாரம் பேணப்படாத உணவு நிலையங்களில் உண்பதை தவிர்த்தல்,செருப்பு அல்லது பூட்ஸ் அணிந்து வெளியில் செல்லல், வெளியே போய் வந்த பின் கை, கால்களை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் கால்நடைகளை நீர் தேங்கியுள்ள பிரதேசங்களில் கட்டி வைத்தல் மற்றும் மேய்ச்சலுக்கு அனுப்புதல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளல் அவசியம்.

இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மனிதரில் தொற்றுக்களை தவிர்ப்பதற்கு விலங்குகளின் கழிவுகள் தேங்கும் பகுதிகளில் உடற்பகுதிகள் நேரடி தொடுகையுறுவதை தவிர்த்தல் அவசியமானது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW