சாய்ந்தமருதில் எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி
Ampara
Eastern Province
Kalmunai
Disease
By Laksi
அம்பாறை (Ampara )-சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (18) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
துண்டு பிரசுரங்கள்
இதன்போது, இதில் எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்த நடைபவனியில் சாய்ந்தமருது குடாக்கரை மேற்கு விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |