இரு வருடங்களில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டும் விடயம்
நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வராத போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால், இன்று நாடாளுமன்ற கூட்டம் மரத்தடியில் தான் கூட வேண்டியிருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரான இரண்டு வருடங்களில் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளதை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதாரத்தின் விதிவிலக்கான வளர்ச்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிதி நிலைமை குறித்த அறிக்கையானது பொருளாதாரத்தின் விதிவிலக்கான வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்களை முன்வைத்துள்ளன.
2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாத் தொழில், மாற்று விகிதம், சுற்றுலா வருவாய் மற்றும் அரசாங்க வருவாய் ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
69%ஆக இருந்த பணவீக்க வீதத்தை 1.7% ஆக குறைக்க இலங்கையால் முடிந்துள்ளது. இந்த மூன்று நாடுகளுடன் ஒப்பிடும் போது பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |