ரணிலின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகள் மும்முரம்: இராஜதந்திரி கொழும்பு வருகை
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Narendra Modi
India
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க, கடந்த வருடம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
முக்கியத்துவமிக்க இருதரப்புப் பேச்சு
எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர்களான அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவமிக்க இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |