நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

Colombo Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Oct 17, 2024 10:31 AM GMT
Laksi

Laksi

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உங்கள் எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் சிறந்த நாடாக மீண்டு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

பொதுத் தேர்தல் 

இந்தநிலையில்,  பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த நாடாளுமன்றத்திற்கு தேவை எனவும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை | Ranil Wickramasinghe Special Speech

அத்தோடு, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , நிதி அதிகாரத்தை வைத்திருக்கும் நாடாளுமன்றம் வலுவாக இருக்க அந்த குழு வெற்றி பெற வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW