அரச பங்காளிகளை இன்று அவசரமாகச் சந்திக்கின்றார் ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (14.06.2023) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் நேற்றுமுன்தினம் புறக்கணித்திருந்த நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளமை முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.
மொட்டுக் கட்சி
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
மொட்டுக் கட்சியினருக்கும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.