ரணிலுக்கு 12 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்: வஜிர கோரிக்கை
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இன்னும் 12 வருடங்கள்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“2024இல் இருந்து இன்னும் 12 வருடங்கள் ரணில் தேசத்தை ஆட்சி செய்ய அனுமதித்தால் இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும்.இல்லை என்றால் தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அழிவுக்கு இட்டுச்சென்ற மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள நிலையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.