ரணிலுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து! தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித்

Ranil Wickremesinghe Sajith Premadasa Prime minister
By Mayuri Sep 24, 2024 10:53 AM GMT
Mayuri

Mayuri

நாங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியாக முன்னோக்கி செல்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் சஜித் பிரேமதாசவால் இந்த தேர்தலில் வெற்றியீட்டியிருக்க முடியும்” என்ற கருத்துக்கு இன்றைய தினம் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஹரினி அமரசூரிய

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஹரினி அமரசூரிய

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இலக்கத்தை மட்டும் பார்த்தால் இப்படி ஒரு விடயத்தை சொல்லலாம். ஆனால் ஆழமான அரசியல் அலசலுக்கு சென்றால் அது உண்மையல்ல என்பது புரியும்.

ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நாங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியாக முன்னோக்கி செல்வோம். அதனுடன் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நபருடன் கைகோர்க்கலாம்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியதாக தகவல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியதாக தகவல்

ரணிலுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து! தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித் | Ranil Sajith Fusion

இன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக என்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர்.

எனது தலைமையில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் பரிந்துரைத்தனர் என குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு பங்கு சந்தை நிலவரம்

கொழும்பு பங்கு சந்தை நிலவரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW