இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஹரினி அமரசூரிய

Prime minister Sri Lanka
By Mayuri Sep 24, 2024 09:29 AM GMT
Mayuri

Mayuri

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமாராக இன்று பதவியேற்றுள்ளார்.  

இதேவேளை பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில், ஹரினி அமரசூரியவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், இன்னும் அது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

அதேநேரம், முன்னாள் பிரதமர் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். எனவே, இடைக்காலத்தில் பிரதமர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை முதலில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்பின்னரே எமது அமைச்சரவையை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery