பொலிஸ் மா அதிபர் நியமன விவகாரம் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு
பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கவேண்டிய தேவை ஏற்படும் எனவும் சட்டவல்லுநர்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.
எதிரான மனுக்கள்
மேலும் இந்த நியமனத்தை முன்னிலைப்படுத்தி தமக்கு எதிராக மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டக்கூடும் என்றும் சட்ட வல்லுநர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியப்படுத்தியுள்ளர்.
எனவே பொலிஸ்மா அதிபர் விடயத்தில் தலையீடு செய்வதை தான் தவிர்த்து கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |