ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Colombo Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 27, 2024 02:59 PM GMT
Laksi

Laksi

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வானது எதிர்வரும் வியாழக்கிழமை(29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் "இயலும் சிறிலங்கா" என்ற கருப்பொருளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரணிலைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்: ரிஷாட் பதியுதீன் காட்டம்

ரணிலைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்: ரிஷாட் பதியுதீன் காட்டம்

தேர்தல் விஞ்ஞாபனம்

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் சென்று படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் "இயலும் சிறிலங்கா" தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Ranil Presidential Election Manifesto

இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது இயலும் சிறிலங்கா என்ற விஞ்ஞாபனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த இலங்கை படிப்படியாக மீட்சியடைந்ததன் பின்னர் மேலும் ஒரு அடியை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.  

ரணிலை ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும்: எம்.ஆர்.எம் பைசால் வேண்டுகோள்

ரணிலை ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும்: எம்.ஆர்.எம் பைசால் வேண்டுகோள்

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை: எம்.எஸ்.அமீரலி

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை: எம்.எஸ்.அமீரலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW