அமெரிக்க ஜனாதிபதி - ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு

Joe Biden Ranil Wickremesinghe Sri Lanka New York
By Majeed Sep 22, 2023 02:15 AM GMT
Majeed

Majeed

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின்போதே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஜோ பைடனுடனான சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி - ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு | Ranil Met Joe Biden In New York

மேலும், சிறு உரையாடலுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பைடன் தம்பதிகளுடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.