மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்...! வெளியான தகவல்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களின் கருத்து என தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நியமிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பணவீக்கம்
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 70% ஆக இருந்த பணவீக்கம் 5% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்காதவர் தாம் ஒருவரே எனவும் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை எனவும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நான்கு வேட்பாளர்களின் பெயர்கள்
தற்போதைக்கு மொட்டுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கான நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

குறித்த நான்கு பெயர்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின்போது மொட்டுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் போட்டியிடும் சந்தர்ப்பம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.