மொட்டுக்கட்சிக்குள் நெருக்கடி: இணக்கப்பாடின்றி நிறைவடைந்த பேச்சுவார்த்தை

Basil Rajapaksa Ranil Wickremesinghe
By Dhayani Mar 22, 2024 03:22 AM GMT
Dhayani

Dhayani

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று (21) இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மொட்டுக்கட்சிக்குள் நெருக்கடி: இணக்கப்பாடின்றி நிறைவடைந்த பேச்சுவார்த்தை | Ranil Basil Meeting In Colombo

இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ச அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாததால், எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மத்தியில் இருதரப்பு கருத்துக்கள் நிலவுவதால் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.