பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: ரணில் உறுதி

Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Sri Lanka Deshabandu Tennakoon
By Harrish Jul 28, 2024 10:32 PM GMT
Harrish

Harrish

பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் நிமித்தம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால உத்தரவு

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும், செப்டம்பரில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்

முன்னதாக தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: ரணில் உறுதி | Rani Assured Inspector General Of Police Problem

கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மனுதாரர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.     

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: ரணில் உறுதி | Rani Assured Inspector General Of Police Problem

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW