கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் இப்தார் நிகழ்வு : உலமாசபை உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்பு !

Hijra - Islamic New Year Trincomalee Sri Lanka
By Nafeel Apr 13, 2023 02:39 PM GMT

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் தலைமை பொலிஸ் நிலையத்தில் கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இப்தார் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி தலைமையில் நல்லிணக்க இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

கே..டபிள்.யு. எல் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

நோன்பின் மாண்புகள், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், இஸ்லாம் வலியுறுத்தும் வாழ்வியல் தொடர்பில் உலமாசபை பள்ளி நிர்வாகம் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உதவி பொலிஸ் அத்தியட்சகர்         கே .எம் ,எஸ் .ஏ.பி.கருணா ரத்ன அவர்களும்  கலந்து கொண்டார் .