திருகோணமலையில் தேசிய மார்பகப் புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Breast Cancer Cancer Trincomalee
By Laksi Oct 24, 2024 10:13 AM GMT

தேசிய மார்பகப் புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு திருகோணமலை -தோப்பூரில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது.

குறித்த பேரணியானது இன்றையதினம் (24) காலை தோப்பூர் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சுலோகங்களை ஏந்தியவாறு பேரணி தோப்பூர் பிரதான வீதி ஊடாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

விழிப்புணர்வு பேரணி

இதன் போது, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஹஸ்ஸாலியினால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தேசிய மார்பகப் புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி | Rally In Trinco National Breast Cancer Month

தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வைத்தியர்கள் உள்ளிட்ட அதிகளவான பெண்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொதுத் தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW