அடுத்த சில நாட்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 09, 2024 02:15 AM GMT

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (09) முதல் அடுத்த சில நாட்களுக்கு ஓரளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

இடியுடன் கூடிய மழை 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை | Rainy Weather To Continue For Next Few Days

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ரணில் - அநுர சதி செய்வதாக சஜித் குற்றச்சாட்டு

ரணில் - அநுர சதி செய்வதாக சஜித் குற்றச்சாட்டு

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW