பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து ஊழியர்கள்

Sri Lankan Peoples Sri Lanka Railways Train Strike Department of Railways Railways
By Fathima Sep 12, 2023 06:31 AM GMT
Fathima

Fathima

தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினத்தின் (12.09.2023) இதுவரையான 10 இற்கும் அதிகமான அலுவலக மற்றும் ஏனைய தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை  தோல்வி

சுமார் 5 வருடங்களாக நடைபெறாத தரம் உயர்வை விரைவுபடுத்துமாறு விடப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து ஊழியர்கள் | Railway Employees Strick And Public Facing Issues

இந்த நிலையில் நேற்றிரவு தொடருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கும், தொடருந்து முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் சேவைகளை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.