கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை

Sri Lankan Peoples Eastern Province Public Health Inspector
By Rakshana MA Feb 20, 2025 08:58 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் திடீர் சோதனை இடம்பெற்றுள்ளது.

இது கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் காரைதீவு, நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்

வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்

பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்கள் 

இதன்போது, சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்கள், பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை | Raids On Restaurants Conducted In Kattankudy

அத்துடன், பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பௌசாத் தலைமையிலான, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வர், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்ஸதீன், பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அண்மைக்காலமாக தொடர்ந்தும் பொது மக்களின் ஆரோக்கியம் கருத்திற்கொள்ளப்பட்டு, இவ்வாறான திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருளுக்கான வரி விரைவில் குறையும்

எரிபொருளுக்கான வரி விரைவில் குறையும்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery