வாகன திருட்டில் இஸ்லாமாபாத் பொலிஸார்! இம்ரான் கானின் கட்சி தலைவர் குற்றச்சாட்டு
சோதனை என்ற பெயரில் பொலிஸார் தனது காரை திருடி சென்றுவிட்டனர் என இம்ரான் கானின் கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் புதிய பொது செயலாளராக உமர் அயூப் கான் நேற்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில்,
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் ஷாலிமர் காவல் நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் பொலிஸார் எனது வீட்டுக்கு மீண்டும் சோதனையிட வந்தனர். அவர்களிடம் சோதனைக்கான வாரண்ட் எதுவும் இல்லை. நான் நிறுத்தி வைத்திருந்த டொயோட்டா ஹை லக்ஸ் டுவின் கேபின் ரக கார் ஒன்றை அவர்கள் திருடி சென்று விட்டனர்.
சட்டவிரோத சோதனையில் ஈடுபடுவதுடன், தற்போது வாகன திருட்டிலும் இஸ்லாமாபாத் பொலிஸார் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.