எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் குழப்பம்: இராதாகிருஷ்ணன் எம்.பி

Sajith Premadasa Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Harrish Jul 14, 2024 09:39 PM GMT
Harrish

Harrish

ஜனாதிபதி தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் விக்ரமசிங்க குழப்பத்திலுள்ளார் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இன்று (14.07.2024) நடைபெற்ற சந்திப்பின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணிலின் திறமை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்குரிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிட்டுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. 

இந்நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

5 ஆண்டுகளா, 6ஆண்டுகளா எனக்கோரி ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. 

எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் குழப்பம்: இராதாகிருஷ்ணன் எம்.பி | Radhakrishnan Mp Speech At Badhulla

19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மற்றுமொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலுடன்தான் 19 நிறைவேற்றப்பட்டது. எனவே, இதுவிடயத்தில் சிக்கல் வராது.

எனவே, ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதி. ஜனாதிபதி தேர்தலுக்கென பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நிதி இல்லை என காரணம் கூறவும் முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் ஆக்கி தனி ஒருவராக நாடாளுமன்றம் வந்து, ஜனாதிபதியாக தெரிவானமை ஜனாதிபதி ரணிலின் திறமை.

எனினும், ஜனாதிபதி தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என குழம்பியுள்ளார். ஏனெனில் மக்கள் ஆணை அவருக்கு இல்லை.

எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் குழப்பம்: இராதாகிருஷ்ணன் எம்.பி | Radhakrishnan Mp Speech At Badhulla

அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சி தலைவராக சஜித் பதவிவகிக்கின்றார். 

அவருக்கான வெற்றி வாய்ப்பே அதிகம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் சஜித் பக்கம் இருந்து சிலர், ஜனாதிபதியுடன் இணையவுள்ளனர் எனக் கூறப்படுவதெல்லாம் சாத்தியமற்ற விடயமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery