மதங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படல் மூலம் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்! (Photos)

Fathima
மதங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படல் மூலம் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்..
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று (11) அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேவையுடையவர்களுக்கு உதவிகளை வழங்கல், கருணை காட்டல் உட்பட பல பண்புகளை ரமழான் வெளிக்கொணர்வதாகவும் குறித்த தன்மைகள் ஏனைய மதங்களிலும் கூறப்பட்டுள்ளன.
இம்மாதத்தில் பெளத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயத்தவர்களின் முக்கிய நிகழ்வுகள் காணப்படுவது விசேடமானது என்றும் இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மெளலவிமார்கள், மேலதிக அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண
பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


