சுங்கத்தில் தடுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இலங்கை சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகளை மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகளை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க அதனை இறக்குமதி செய்தவர் இணங்கியுள்ளதாக வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குர்ஆன் உள்ளடக்கத்தில் எவ்வித பிரச்சனைகளும் கிடையாது
இந்த குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகள், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விதம் தொடர்பில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அதனால் அவை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த புனித குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிளை மீண்டும் இந்தியாவிற்கே ஏற்றுமதி செய்வதற்கு குறித்த இறக்குமதியாளர் இணங்கியுள்ளனர்.
அத்துடன், புனித குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் கிடையாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |