கச்சத்தீவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: ஜெய்சங்கர் தெரிவிப்பு

Dr. S. Jaishankar India Kachchatheevu
By Madheeha_Naz Apr 02, 2024 06:18 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கச்சத்தீவு (kachchatheevu) பிரச்சினையை தீர்க்கும் சூழ்நிலையில் தற்போதைய மத்திய அரசு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் (New Delhi) செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம், பாரதீய ஜனதாவின் தமிழ் நாட்டு (Tamil Nadu) தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொண்ட தகவல்கள் தற்போது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

தகவல் அறியும் சட்டம்

இதன்படி முன்னாள் பிரதமர் நேரு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்தததோடு இந்திரா காந்தி அதனை தாரை வார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

~/quick-solution-kachchadivu-issue-jaishankar-1712033655

அத்துடன் அந்த தீவை ராம்நாடு என்று சொல்லப்படுகின்ற இராமநாதபுரம் மன்னர் ஆட்சி செய்தமைக்கான ஆவணங்களை இந்திய தரப்பு இதன்போது கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைவிட முக்கியமாக கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்படும் முழு தகவல்களும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு (M.Karunanidhi) அறிவிக்கப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடான தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் தமக்கும் இந்த விடயத்துக்கும் பொறுப்பில்லை என்ற அடிப்படையிலேயே காங்கிரஸிடம், திராவிட முன்னேற்றக்கழகமும் செயற்படுவதாக ஜெய்சங்கர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை கடந்த 20 ஆண்டுகளில் 6ஆயிரத்து 184 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 175 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.