யாழ்ப்பாணத்தில் பாடசாலை பரீட்சை வினாத்தாள் சர்ச்சை! நடத்தப்படவுள்ள விசாரணை
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆங்கில மொழி மூல விஞ்ஞான பரீட்சையில், தனியார் கல்வி நிலையத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சு
கடந்த வாரம் யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூலம் விஞ்ஞான பரீட்சை இடம்பெற்றுள்ளது.
குறித்த பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாள் ஏற்கனவே தனியார் கல்வி நிலையம் ஒன்றினால் வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள் என்பது தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன் அடிப்படையில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.