எரிபொருள் விலை உயரும் சாத்தியம்

Vasudeva Nanayakkara Sri Lanka Fuel Crisis Petrol diesel price Fuel Price In World
By Fathima Oct 12, 2023 01:42 AM GMT
Fathima

Fathima

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் என  நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை உயரும் சாத்தியம் | Qr System In Sri Lanka

எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில் எனவும் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை

மேலும், உலகில் நிலவும் யுத்த சூழல், எதிர்வரும் குளிர்கால காலநிலை, எரிபொருள் போக்குவரத்திற்காக அறவிடப்படும் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயரும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.