எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்தி மோசடி!
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Government
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Fathima
கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றவர்களின் கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சரின் அறிவிப்பு
இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றும் (03) நாளையும் (04) எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.