QR Code முறை ரத்து
Ceylon Petroleum Corporation
By Kamal
இன்றைய தினம் முதல் அமுலாகும் வகையில் தேசிய எரிபொருள் உரிமம் (QR Code) நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் நுகர்வோர் இனிவரும் காலங்களில் வழமை போன்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எவ்வித வரையறைகளும் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.