இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் நடுவராக செயற்பட்டுவந்த கட்டார் குறித்த பணியை இடைநிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸா - இஸ்ரேல் போரானது இன்றுடன் 399 நாட்களை கடந்த நிலையில் இதுவரையில் இவ் யுத்தத்தில் 45,000 க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
புதிய அமைதிப் பேச்சுவார்த்தை
கடந்த காலங்களில் இஸ்ரேல் - ஹமாஸ் இற்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையொன்று கட்டாரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்பேச்சு வார்த்தையில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் மற்றும் இஸ்ரேலின் உளவுப்பிரிவு மொசாட்டின் தலைவர் டேவிட் பேர்னியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இதனை தொடர்ந்து, கட்டாரில் ஹமாஸ் பிரதிநிதிகள் இருப்பதை வொஷிங்டன் இனி ஏற்காது என்று சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து, காசாவில் போரை நிறுத்துவதற்கான புதிய திட்டங்களை பாலஸ்தீனிய குழு நிராகரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தங்கள் விருப்பத்தைக் காட்டும்போது, குறித்த பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என கட்டார் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மத்தியஸ்தப் பேச்சுக்களிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்த போதிலும், டோஹாவில் உள்ள ஹமாஸின் அரசியல் அலுவலகம் இனி அதன் நோக்கத்தை நிறைவேற்றாது என கூறுவது தவறானது எனக் கட்டார் கருத்து வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |