மூத்த உலமா காஸிம் மௌலவியின் நினைவாக "ஆசானுக்காக கையேந்துவோம்" நினைவுரையும், துஆ பிராத்தனையும்.

Sri Lanka Kalmunai
By Nafeel Apr 20, 2023 06:32 AM GMT
Nafeel

Nafeel

அண்மையில் காலமான சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையின் பிரதித்தலைவரும், பிரதியதிபருமான, சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீட பிரதானி மூத்த உலமா மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்களின் நினைவுப்பேருரையும், துஆ பிராத்தனையும் அவர் பிரதியதிபராக கடமையாற்றிய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் காலமான மூத்த உலமா மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்களுக்கான துஆ பிராத்தனையை நிகழ்த்தினார்.

மேலும் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்கள் தொடர்பிலான நினைவுரையை மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய ஸ்தாபக அதிபர் ஏ.எம். இப்ராஹிம் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வின் விசேட அழைப்பாளர்களாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ், மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுதீன், மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர், அல்- மீஸான் பௌண்டஷன், அல்- அமானா நற்பணி மன்றம், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கம், மீன் மொத்த வியாபாரிகள் சங்கம், சனசமூக நிலையம் உட்பட சிவில் அமைப்புக்கள் பலவற்றினதும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், மர்ஹூம் மௌலவி யூ.எல்.எம்.காஸிம் அவர்களின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் இப்தார் வைபகமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.