புத்தளம் காட்டினுல் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு
புத்தளம் - குருநாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் தம்பபண்ணி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற சிலர் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த நிலையில் 119 தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வாறு 119 அழைப்பிற்கமைய புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர்.
இந்நிலையில், குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்க
உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



