ஹிஜாப் அணியாத பெண்களை தண்டிக்க தீர்மானம்!

Iran
By Chandramathi Apr 09, 2023 10:10 PM GMT

தலையை மறைப்பது நாட்டின் சட்டம். சட்டத்தை மீறும் எவரும் அல்லது எந்தவொரு குழு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என ஈரானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறையாக தலையை மறைக்காத பெண்களைக் கண்டறிந்து தண்டிக்கும் வகையில் பொது இடங்களில் கமராக்களை பொருத்த ஈரான் அரசு தீர்மானித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஈரானிய பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் இடம்பிடித்த மக்கள் போராட்டம்

ஹிஜாப் அணியாத பெண்களை தண்டிக்க தீர்மானம்! | Punish To Women Hijab Problem In Iran

முறையான முக்காடு அணியாததால் கைது செய்யப்பட்ட மாஹ்சா அமினி என்ற இளம் பெண், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பொலிஸாரின் காவலில் உயிரிழந்தார்.

அதன் மூலம் காவல்துறைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் தொடங்கி, நாட்டின் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டமாக வரலாற்றில் இடம்பிடித்திருந்தது.

தற்போது போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, அரசு தலையிட்டு பெண்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.