PHI மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Ministry of Health Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Vinoja Jun 22, 2026 02:07 PM GMT

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மோசடியாக பணம் வசூலிக்கும் குழுவொன்று செயல்பட்டு வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த மோசடிக்காரர்கள், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அச்சுறுத்தி பொதுமக்களிடம் பணம் கோரி வருவதாக சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

PHI மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Public Warned Over Fake Phi Scam

அறிவுறுத்தல்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றும் போது எந்தவொரு காரணத்திற்காகவும் கட்டணம் வசூலிப்பதோ அல்லது பணம் பெற்றுக்கொள்வதோ இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தங்களை PHI அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு யாரேனும் பணம் கோரினால், அவர்களுக்கு எந்தவித பணமும் வழங்காமல் அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.