சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Hospitals in Sri Lanka National Health Service Doctors
By Rakshana MA Mar 26, 2025 04:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதிவு செய்யப்படும் நோயாளர்களைவிட அதிகளவானவர்கள் சமூக மட்டத்தில் காணப்படலாம்.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

நோய்ப்பரவல்

நுளம்புகள் மூலமாகவே சிக்குன்குனியா நோய் பரவுகிறது. சிக்குன் குனியா நோயைப் போன்று டெங்கு நோய் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Public Urged To Be Vigilant About Chikungunya

ஆகவே, நுளம்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அதேபோன்று நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியரை நாடி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள மூலிகை வளர்ப்பு திட்டம்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவு

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW