நுவரெலியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்
நுவரெலியா பிரதேச சபைக்கு முன்னால் பெருந்திராளான மக்கள் ஒன்றுகூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இரண்டாம் கட்ட புதிய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று (02) நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் கூடியுள்ளனர்.
மக்கள் திரள்
எனினும் குறித்த அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ள வில்லை என மக்கள் அதிருப்தியடைந்து குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள அதிகாரிகள் யாரும் செயற்படவில்லை மற்றும் குறித்த நலன்புரி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றபடவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இது தெடர்பாக பிரதேச சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த வாரங்களில் பொது மக்களின் வருகை சற்று குறைவாக காணப்பட்டது ஆனால் தற்போது சீரான காலநிலை நிலவி வருவதனால் பலரும் வருகை தருகின்றனர் இது தான் இந்த நெரிசல் நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |