ஆசிரியர் பற்றாக்குறை..! ஆதங்கத்தில் பொதுமக்கள்

Trincomalee Sri Lankan protests Sri Lankan Peoples SL Protest Eastern Province
By Kiyas Shafe Mar 11, 2025 10:16 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் இரண்டு மணித்தியாளங்கள் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் 352 மாணவர்கள் கல்வி கற்பதோடு இது க.பொ.த. சாதாரண தரம் வரையான மாணவர்கள் கற்கும் பாடசாலையாகும். 

கோவிட்கால ஜனாஸா எரிப்பு..! முன்னாள் இராஜாங்க அமைச்சர் எதிர்ப்பு

கோவிட்கால ஜனாஸா எரிப்பு..! முன்னாள் இராஜாங்க அமைச்சர் எதிர்ப்பு

ஆதங்கத்தில் பொதுமக்கள்

இந்நிலையில் இப்பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமயம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதோடு இது தொடர்பாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கை முன்வைத்த போதிலும் இதுவரை அவை நிறைவேற்றப்படாமையினால் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை..! ஆதங்கத்தில் பொதுமக்கள் | Public Protest Infornt Of Mutur Zonal Education

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தியதோடு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் தேவதாஸ் ஜெயந்தன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறை..! ஆதங்கத்தில் பொதுமக்கள் | Public Protest Infornt Of Mutur Zonal Education

இந்நிலையில் மூதூர் வலயத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததோடு இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒரு குழுவொன்றை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகைதரும் என தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.

அத்தோடு பிரதிக் கல்வி பணிப்பாளரிடம், ஆர்ப்பாட்டக்காரர்களினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

முல்லைத்தீவு பாடசாலையில் போராட்டம்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery