மின் கட்டணம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து : வடமத்திய மாகாண நிலவரம்
இலங்கை மின்சார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொதுமக்கள் கருத்து கோரல் நடவடிக்கைகள் இன்று(05) வடமத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வீட்டு மின்சார பாவனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக்கட்டணம்
இந்த நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மக்கள் கருத்து கோரல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.
இதன்படி, மாகாண மட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்தச் செயற்பாட்டின் முடிவில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |