அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பொது விசாரணை நிகழ்ச்சி

By Mayuri Aug 20, 2024 12:06 PM GMT

கோவிட் 19 மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் உங்களது சுகாதார உரிமைகள் மீறப்பட்டதா உங்களிடம் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா என்பது தொடர்பிலான பொது விசாரணை நிகழ்ச்சி அட்டாளைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது. 

தொற்றுநோய் கால நீதி மற்றும் சுகாதார உரிமை தொடர்பான மக்கள் ஆணையம் நடத்திய இந்த விசாரணை நிகழ்ச்சியானது நேற்று (19) காலை முதல் மாலை வரை இடம்பெற்றுள்ளது. 

இதன்போது ஆணையத்தின் தலைவரான சர்வோதய தலைவர் வின்யா ஆரியரட்ன, ஆய்வாளர் சிவஞானம் பிரபாகரன், கலாநிதி உபுல் விக்ரமசிங்க ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery