ஜனாதிபதி தேர்தல் : பொதுமக்களிடம் காவல்துறை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Election
By Sumithiran Sep 21, 2024 04:04 PM GMT
Sumithiran

Sumithiran

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எவ்வாறாயினும், அமைதியான முறையில் முடிவுகளைக் கொண்டாடுமாறும், நாடு முழுவதும் ஒழுங்கைப் பேணுவதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் : பொதுமக்களிடம் காவல்துறை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | Public Celebrate Election Results Peacefully

தேர்தலுக்குப் பிந்தைய காலப்பகுதியிலும் ஒரு வாரத்திற்குப் பிறகும் வாகனங்கள் மூலமாகவோ அல்லது பாதயாத்திரையாகவோ அனைத்து வகையான பொது அணிவகுப்புகளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் 

குடிமக்கள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர். 119, 118, 107 (வடக்கு/கிழக்கு), 011 202 7149 அல்லது 011 201 3243 மற்றும் தொலைநகல் எண் 111 239 9104.