திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

Sri Lanka
By Nafeel May 07, 2023 02:41 AM GMT
Nafeel

Nafeel

நூருல் ஹுதா உமர்

மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்கில் இணைந்த கரங்கள் அமைப்பினால் நாடுதழுவிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக அம்பாரை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஷ்ட மற்றும் தொழில் வாய்ப்பற்று குறைந்த வருமானத்தின் கீழ் வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கமு/திகோ/ஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கும், பொத்துவில் கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள்,

புத்தகப்பை என்பன இன்று இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன்,மா.ஜெயநாதன், தி.சதிஸ்குமார்.

ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர். இன் நிகழ்வில் கமு/திகோ/இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் க. சந்திரகாசன், மற்றும் ஆசிரியர் க. கருணாகரன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGallery