காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலகெங்கிலும் எதிர்ப்பலைகள்
கடந்த 2024ஆம் ஆண்டு முதல் காசா - இஸ்ரேல் போர் உக்கிரமான காணப்பட்டது. இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு முன்னெடுக்கப்ட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இஸ்ரேல் காசா மீது மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. இதனால் காசாவில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது துருக்கிய - பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனையை இஸ்ரேல் அழித்ததை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
போராட்டம்
குறித்த மீள் போரை எதிர்த்து உலகின் பல பகுதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, நேற்று(21) கொலம்பியாவின் போகோட்டாவில் காசாவில் நடந்த போருக்கு எதிராக மக்கள் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுடன் சேர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் குறுக்குவெட்டு புகைப்படங்களை இந்தோனேசிய பெண் ஒருவர் காட்சிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், கிரேக்கத்தின் ஏதென்ஸில் பாலஸ்தீன ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை எதிர்த்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



