ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்

Sri Lanka SL Protest Hatton
By Shalini Balachandran Jul 28, 2024 09:20 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு கோரி ஹட்டனில் (Hatton) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (28) பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.வேலுகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

யாழ் சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

யாழ் சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

கறுப்புக் கொடி

மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, சம்பள உரிமை மற்றும் வீட்டு உரிமை என்பன இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட்டமை தொடர்பிலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில்,  கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன் ஹட்டனில் உள்ள சில கடைகளிலும் மற்றும் முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம் | Protest Of Upcountry People In Hatton

ஹட்டன் நகர புட்சிட்டி பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஹட்டன் பிரதான நகர் வழியாக பேரணியானது மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்ததுள்ளது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலகத் தடுப்பு பிரிவினரும், நீர் தாரை பிரயோக வாகனமும் மற்றும் ஹட்டன் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டதுடன் ஹட்டன் காவல் பிரிவிற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் பெருந்தொகையான காவல் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்ததோடு இந்த போராட்டம் காரணமாக ஹட்டன் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery