புத்தளத்தில் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் (Photos)
Puttalam
Palestine
By Fathima
புத்தளத்தில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (13.10.2023) ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200ற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் பதாதைகளை
ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







