நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு

Ampara Hospitals in Sri Lanka Eastern Province
By Laksi Jan 25, 2025 02:26 AM GMT
Laksi

Laksi

அம்பாறை - நிந்தவூர் (Nintavur) ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (24) மதியம் பொதுமக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய விசாரணைகளை பக்கச் சார்பின்றி நடாத்துமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கியமை கண்டிக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

தீர்வு

அத்தோடு, இந்த விடயம் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்க கொடுக்குமாறும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சுகாதார அமைச்சரை நாடாளுமன்றத்தில் வைத்து கேட்டுக் கொண்டார்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு | Protest In Nintavur Hospital

மேலும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சம்பந்தமான காணொளி ஒன்று ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நடைபெறுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு கிடைத்த பரிசு இது என பாலமுனை வைத்தியசாலைக்கு தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலி தனது முகப்புத்தகத்தில் தெளிவுபடுத்தி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW